ரூமில் பேசி கொண்டிருந்த மாலாவும் சூசையும்.. டக்கென நுழைந்த கணவர்.. பின்னாடியே வந்த மகன்.. மிரண்ட ஊர்

ராத்திரி நேரத்தில் மாலாவும், சூசையும் பேசிக் கொண்டிருந்தனர்.. அப்போது திடீரென மாலாவின் கணவர் அங்கு நுழைந்துவிட்டார்.. கொஞ்ச நேரத்தில் சூசையின் மகனும் அங்கே வந்துவிட்டார்.. இதையடுத்துதான் அந்த அடுத்தடுத்த பயங்கரம் நடந்தது. தூத்துக்குடி அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி.. 50 வயதாகிறது.. மனைவி பெயர் மாலா.. 49 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் இருக்கிறார்கள். ரவி ஒரு மெக்கானிக்.. சிப்காட் பகுதியில் டூவீலர் ரிப்பேர் செய்யும் வேலையை செய்து வருகிறார்.. மகன்கள் 2 பேருமே காலேஜ் படிக்கிறார்கள்.. மகளுக்கு கல்யாணமும் ஆகிவிட்டது.

ஆனால், 15 வருஷமாக, மாலாவுக்கு சூசைமச்சாது என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது.. குடும்ப நண்பரும்கூட.. இவர் அடிக்கடி மாலா வீட்டுக்கு வந்து போயுள்ளார்.. இவர்களின் இந்த பழக்கவழக்கம் ரவிக்கும் தெரியவந்துள்ளது.. அதனால், மனைவியை கண்டித்துள்ளார்.. சூசையையும் எச்சரித்தே வந்திருக்கிறார்.. ஆனால், இருவருமே கேட்காமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார்.. மாலாவின் மகள் கல்யாணத்தில் எல்லா செலவையும் சூசைமச்சாதுவே செய்தாராம். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மாலா வீட்டிற்கு சூசை வந்துள்ளார்.. இருவரும் பேசி கொண்டிருந்தபோது, திடீரென, ரவி அங்கே வந்தார்.. இவர்களை பார்த்ததுமே ஆத்திரமடைந்து தட்டி கேட்டுள்ளார்.. பதிலுக்கு மாலாவும் சண்டை போட்டுள்ளார்.

சூசையுடன் அப்படித்தான் பேசுவேன் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், டூவீலர் பேட்டரிக்கு ஊற்றும் ஆசிட்டை எடுத்து கள்ளக்காதல் ஜோடி முகத்தில் வீசினார்.. அந்த நேரம் பார்த்து, சூசையை காணோம் என்று அவரது மகன் கெர்பின் அங்கு தேடி வந்துள்ளார்.. அவர் மீதும் ஆசிட்டை ஊற்றிவிட்டார் ரவி.. 3 பேருமே முகத்தில் ஆசிட் கொட்டியதில் துடிதுடித்து கதறினார்கள். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதற்குள் ரவி தப்பி ஓடியோடிவிட்டார். ஆசிட்டை, சூசையின் கண்ணிலும், மாலாவுக்கு உடம்பு முழுவதும், கெர்பினுக்கு நெஞ்சு பகுதியிலும் வீசியுள்ளார் ரவி.. 3 பேருமே உயிருக்கு ஆபத்தான நிலையில், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாலா, சூசை இருவருக்குமே கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாம்.. இந்த வழக்கு குறித்து சிப்காட் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. ரவி இன்னும் கிடைக்கவில்லை, அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Contact Us