இந்த கமராவை உள்பக்கமாக திருப்பி விட்டது யார் ? மெற்றோ பொலிடன் பொலிசார் விசாரணை

முன் நாள் பிரித்தானிய சுகாதார துறை அமைச்சரின், அந்தரங்க அறைக்குள் சமீபத்தில் பொருத்தப்பட்ட CCTV கமரா அறைக்கு வெளியே உள்ள பல்கனியை கண்காணிக்கும் நோக்கில் பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள கமரா அறைக்கு வெளியே தான் படம் எடுக்க வேண்டும். ஆனால் அதனை யாரோ உள் பக்கமாக திருப்பி விட்டுள்ளார்கள் என்று பொலிசார் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்கள். அவர்களின் முதல் கட்ட விசாரணையில், சட்டத்திற்கு புறம்பான முறையில் மறைத்து வைக்கப்படும் சிறிய ரக கமரா ஏதாவது பொருத்தப்பட்டதா ? என்று தான் இன்று ஆராய்ந்துள்ளார்கள். ஆனால் கமராவை உள் பக்கமாக திருப்பிய விடையம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்னவென்றால்.. (வீடியோ கீழே உள்ளது)

குறித்த கமரா சுகாதார அமைச்சுக்கு தெரிந்தே பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் மாறி இருந்துள்ளது. இவை எல்லாமே தற்செயலாக நடந்தது போல உள்ளது. ஆனால் மிக மிக திட்டமிடப்பட்டு மிக நேர்த்தியாக நடந்துள்ளது. எந்த ஒரு கோணத்தில் இருந்து பார்த்தாலும் சன் பேப்பரையோ இல்லை CCTV கமரா பொருத்திய நபரையோ பொலிசார், குற்றவாளி என்று கூற முடியாத நிலை காணப்படுகிறது. வைத்திருக்கிறார்கள் ஆப்பு, அது பெரும் ஆப்பு தான்.

Contact Us