கட் பண்ணுங்க…! கட் பண்ணுங்க…! ‘லைவ்ல நியூஸ் வாசிச்சிட்டு இருந்தவரு…’ திடீர்னு ‘ஆடியன்ஸை’ நோக்கி சொன்ன விஷயம்…! – அதிர்ந்து போன நியூஸ் சேனல்…!

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள கேபிஎன் செய்தி சேனலில் கன்டின்டா கலிமினா என்பவர் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

Zambia newsreader talking live news not paid salary

கேபிஎன் சேனலில் வழக்கம் போல லைவ் செய்தி வாசிக்கத்தொடங்கிய கன்டினா கலிமினா, தலைப்புச் செய்திகள், சர்வதேச செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தவர் திடீரென, கொஞ்ச நேரம் இந்த செய்திகளை எல்லாம் ஓரமாக வைப்போம் என ஆடியன்ஸ் நோக்கி பேச ஆரம்பித்தார்.

ஷாரோனுக்கு வழங்கவில்லை. ஏன் எனக்கும் ஊதியம் வழங்கவில்லை. எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்’ எனக் கூறி நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தினார்.

இதுகுறித்து செய்தி வாசிப்பாளர் கன்டினா தன்னுடைய முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், ‘இதுகுறித்து பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பேச அச்சப்படுகிறார்கள். ஆனால் நான் இதை டிவி லைவ்வில் பேசினேன். அதற்காக பத்திரிகையாளர்கள் பேசக் கூடாது என்ற அர்த்தமில்லை’ எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கேபிஎன் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘கனிண்டா குடித்துவிட்டு செய்தி வாசித்ததால் அவ்வாறு உளறியுள்ளார். இது மிகவும் தவறான நடவடிக்கை. குடித்துவிட்டு அவர் எப்படி செய்தி வாசிக்க சென்றார் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us