மகிந்தவிற்கே ஆப்பு வைக்கும் ராஜபக்ச சகோதரர்கள்; அம்பலமான உண்மை!

தற்போது அரசியல் களத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உக்கிரம் பெற்றுள்ளன. கூட்டணியின் பங்காளி கட்சிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றில் உள்ள ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குபவர்களாக உள்ளார்கள்.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது அரசியல் களத்தில் முன்னெடுக்கப்படுகிறது. கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரச்சினை மற்றும் அவர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண பிரதமர் அக்கறை கொள்ளவில்லை. எம். சி. சி ஒப்பந்தம், சோபா ஒப்பந்தம் செயற்படுத்தப்படுமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Contact Us