நம்ம ‘பொறுமைய’ ரொம்ப சோதிக்குதே…! ‘இதெல்லாம் வேலைக்கு ஆகாது…”ஆசிரியர்’ எடுத்த அதிரடி முடிவு…!

வீட்டினுள் சிக்னல் இல்லாததால் மரத்தையே வகுப்பறையாக மாற்றி ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வரும் அரசு பள்ளி ஆசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

school teacher turns a tree into a classroom online class

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019-ஆம் ஆண்டிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக சில வசதி குறைந்த மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இன்டர்நெட் சிக்னல் குறைபாடு காரணமாக படிப்பும் தடைபட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் குடகு என்ற மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் சி.எஸ்.சதீஷா. இவர் தன் வீட்டில் இண்டர்நெட் சிக்னல் கிடைக்கவில்லை என அருகில் இருந்த மாமரத்தையே வகுப்பாக மாற்றியுள்ளார்.

மரத்தின் மீது பலகை அமைத்து, ஆன்லைன் வகுப்புக்கு தேவையான கேமரா போன்றவற்றை செட் செய்து ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார். இந்த சம்பவம் இணையத்தில் பரவியதையடுத்து ஆரம்ப பள்ளி ஆசிரியருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Contact Us