யாழில் பெரும் பதற்றம்; சற்றுமுன் வாள்வெட்டு; 4 பேர் படுகாயம்!

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

சம்பத்தில் வாகனங்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் குறைந்தது நால்வர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Contact Us