ராணுவ வீரர்களுக்கு உரு மறைப்பு கிட்- சாதங்களாலும் கண்டு பிடிக்க முடியாத கல் பாறை போன்றவை.

போரின் போது வீரர்களை காப்பாற்றவும், எதிர்கள் கண்களில் சிக்காமல் இருப்பதும் பெரிய விடையம். இதற்காக உரு மறைப்பு செய்ய செடிகள் போன்ற உடை, பனி படலம் போன்ற உடைகளை தாயாரித்து பாதுகாப்பு அமைச்சு தனது நாட்டு ராணுவ வீரர்களுக்கு கொடுக்கிறது. ஆனால் இஸ்ரேலில் இயங்கி வரும் பாதுகாப்பு நிலையம் ஒன்று, கற்கள் போன்ற கவச உருமறைப்பு உடை ஒன்றை முதன் முறையாக தயாரித்துள்ளது. இரவு நேர பார்வை சாதனத்தில் இவை சிக்காமல் இருப்பதோடு. இன்பா ரெட் என்று அழைக்கப்படும் புற ஊதா கதிர்கள் கொண்ட ஸ்கேனர்களிலும் இவை சிக்காதாம்.

அதனால் உடலில் இருந்து வெளியாகும் வெப்பத்தை வைத்து, கண்டறியும் கருவிகள் கூட இந்த உருமறைப்பு உடையை அணிந்த நபரை கண்டு பிடிக்காது. இதனால் இந்த உடைக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

Contact Us