சங்கருக்கு மேலும் ஏழரை கூட்டிய இந்தியன் 2: கிடுக்கிப் பிடி போட்ட லைக்கா நிறுவனம் !

சங்கர் படம் எடுத்து எந்த தயாரிப்பாளரை வாழ வைத்தார் என்று கேட்டால், சின்ன பிள்ளை கூட தலையில் கையை வைக்கும். அந்த அளவுக்கு பல தயாரிப்பாளர்களை பிச்சை எடுக்கவைத்து காணமல் ஆக்கியவர் சங்கர். அவர் பிரம்மாண்டம் என்று சொல்லியே ஒரு பாட்டு சீனுக்கு மட்டும்,10 கோடி வரை செலவு செய்வார். பாட்டு சீனுக்கு அவர் செலவு செய்யும் காசை வைத்தே 3 படங்கள் எடுத்து விடலாம். இன் நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பை அப்படியே நிறுத்தி வைத்து விட்டு. வேறு படப்பிடிப்பில் இறங்க, சங்கர் முனைந்தவேளை. லைக்கா நிறுவனம் கிடுக்கிப் பிடி போட்டது. அவர்கள் தொடர்ந்த வழக்கில், தற்போது சிக்கித் தவிக்கிறார் சங்கர். இது இவ்வாறு இருக்க…

நீதிமன்றில் ஷங்கர் தரப்பில் கூறப்பட்ட பதில்கள் திருப்தியாக இல்லை என்பதனால், இப்பிரச்சினைக்காக மத்தியஸ்தரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது நீதி மன்றம். இருவருக்குமான பொதுவாதியாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார். சங்கரிடம் இயக்குனர் செல்வமணி பேசியும், சங்கர் இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை தெரிவிக்க மறுக்கிறார். நான் படம் எடுப்பேன். நீங்கள் லண்டனில் இருந்து காசை அப்படியே அனுப்பிக் கொண்டு இருக்கவேண்டும் என்று லைக்கா நிறுவனத்தை பார்த்து சங்கர் கூறியுள்ளாராம். அப்படி என்றால் நீங்கள் சந்திர மண்டலம் சென்று அங்கேயும் கமராவை வைத்து படம் எடுப்பேன்.  1,000 கோடி வேண்டும் என்று கேட்பீர்கள் போல உள்ளதே என்று , வேறு ஒரு இயக்குனர் கேட்டுள்ளார்.

ஆனால் சங்கரோ இந்தியன் 2 படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் என்பதனை சொல்ல மறுத்து வருகிறார். ஒரு இயக்குனர் எப்படி பட்ஜெட்டை சொல்லாமல் படத்தை எடுக்க முடியும் ?  என்ற கேள்வியே மேல் எழுந்து நிற்கிறது.

Contact Us