உணவு டெலிவரிக்காக சென்ற போது பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த கடைக்காரரின் மகன்!

உணவு டெலிவரி கொடுக்க சென்ற போது தனியாக இருந்த பெண் மருத்துவரை வாலிபர் ஒருவர்  பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும், மரியாதை செலுத்தும் விதமாகவும் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் (ஜூலை 1) கொண்டாடப்படுகிறது. கொரோனா காலத்தில் மருத்துவர்களின் பங்கு என்ன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படிப்பட்ட தினத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் மருத்துவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் உள்ள செண்டிபதா பகுதியில் உள்ள ஒரு தாபா உணவகத்திற்கு சென்று இரவு உணவு சாப்பிட்டிக்கொண்டிருந்தார். பின்னர் மருத்துவரான தனது சகோதரிக்கு உணவு பார்சல் வாங்கி அதனை அவர்களின் வீட்டுக்கு டெலிவரி செய்யுமாறு தாபா உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

தாபா உரிமையாளரின் மகன் சுகந்தா பெகெரா (வயது 35), அதே பகுதியில் உள்ள மருத்துவர்களுக்கான குடியிருப்புக்கு இரவு 11 மணியளவில் அந்த உணவை டெலிவரி செய்வதற்காக சென்றார். அந்த சமயத்தில் 32 வயதாகும் பெண் மருத்துவரின் வீட்டில் யாரும் இல்லாததை பார்த்த சுகந்தா பெகெரா, அப்பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இச்சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுநாள் காவல்நிலையத்துக்கு சென்ற பெண் மருத்துவரும் அவருடைய சகோதரரும், நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து அங்குல் எஸ்.பி ஜக்மோகன் மீனாவின் உத்தரவின் பேரில் சுகந்தா பெகெரா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்பட்டார்.

பிரபல மருத்துவரும் மேற்குவங்க முன்னாள் முதல்வருமான பிதன் சந்திர ராயின் பிறந்த மற்றும் மறைந்த தினம் ஜூலை 1ம் தேதியாகும். அவரின் நினைவாகவே தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவ சமூகத்திற்கு பிதன் சந்திர ராயின் பங்களிப்புக்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Contact Us