பஷிலுக்காக தயாராகவும் அரச மாளிகை; மஹிந்தவிடமிருந்து பறிபோகிறது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்காக அலரி மாளிகை தயார் செய்யப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஷில் ராஜபக்ஷ அடுத்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று நிதி மற்றும் பொருளாதார அமைச்சு அவருக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே, அலரிமாளிகையில் ஒரு பகுதி அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அந்த அமைச்சின் அலுவலகத்தை அலரிமாளிகையில் அமைக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Contact Us