சுட்டெரித்துவரும் வெயிலில் சிக்கி 486 பேர் பலி; பெரும் கோரம்; எந்த நாட்டில் தெரியும்!

கனடா மற்றும் அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவில் உள்ள வடமேற்குப் பிராந்தியங்களில் தற்போது அனல் காற்று வீசுகிறது. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 121டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கத்தை தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்குப்பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 486 பேர் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

Contact Us