சீனாவிடம் மோதினால் மண்டை உடைபடும் – ஜிங்பிங் எச்சரிக்கை…!!!

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைநகர் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் அதிபர் ஜின்பிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சீனாவின் இறையாண்மை பாதுகாக்கப்படும். அதே நேரத்தில் சுமூகமான அமைதியையும் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவை அவமதிக்கவோ, நிர்பந்திக்கவோ முயன்றால் உருக்கால் ஆன மாபெரும் சுவற்றுடன் மோதி மண்டையை உடைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று சீன அதிபர் ஜின்பிங் எச்சரித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து பேசிய அவர், சீன ராணுவத்தின் வலிமையை பெருக்கவும், தைவானுடன் மீண்டும் சீனாவை ஒருங்கிணைக்கவும் உறுதி பூண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Contact Us