பிரிட்டனில் தனியாக வாழ்ந்த தம்பதி மர்மமாக உயிரிழப்பு.. காவல்துறையினர் தீவிர விசாரணை

பிரிட்டனிலுள்ள வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில், கெனில்வொர்த் என்ற சாலையில், 1.5 மில்லியன் டொலர் மதிப்பு கொண்ட மிகப்பெரிய மாளிகை வீடு அமைந்துள்ளது. அங்கு இருவர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு, அவசர உதவி குழுவினர் மற்றும் மருத்துவர்களுடன் சென்றிருக்கிறார்கள்.

அந்த வீட்டில் வசித்த சேவா படியால் என்ற 87 வயது முதியவரும் அவரது மனைவி சுக்ஜித் (73) இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அந்த வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பதால் கொலை அல்லது தற்கொலையாக இருக்கும் என்று காவல் துறையினர் கருதியுள்ளனர்.

வீட்டின் அறையில் மனைவியும், தோட்டத்தில் கணவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அருகில் வசிப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துணிக்கடை வியாபாரியான, சேவா படியாலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. எனினும் இருவரும் தனியாகதான் வீட்டில் வசித்து வந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.

Contact Us