ஜூடோ பயிற்சியில் 27 முறை வீசி எறியப்பட்ட சிறுவன் பலி.. வலியால் துடித்தபோதும் விடாத பயிற்சியாளர்..!!

தைவானின் தலைநகரான தைபேவில் வசிக்கும் 7 வயது சிறுவன் தன் மாமாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அன்று ஜூடோ பயிற்சி அளிக்கக்கூடிய மையத்தில் சேர வந்திருக்கிறார். அப்போது பயிற்சியாளர் அங்கிருந்த ஒரு மாணவரை அழைத்து சிறுவனுக்கு ஜூடோ பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது அந்த மாணவன், சிறுவனை பலதடவை தூக்கி வீசியிருக்கிறார். இதில் வலியால் கதறித் துடித்த சிறுவனை மீண்டும் எழுந்து நின்று பயிற்சியை மேற்கொள்ளுமாறு,  பயிற்சியாளர் வற்புறுத்தியுள்ளார். சிறுவன் கதறி அழுதவாறு பயிற்சியை தொடர்ந்துள்ளார். அப்போது அந்த மாணவன், சுமார் 27 தடவை தூக்கி வீசியதால் சிறுவன் சுய நினைவை இழந்துவிட்டார்.

எனினும் பயிற்சியாளர் சிறுவனை நம்பாமல் நடிப்பதாக கருதியிருக்கிறார். அதன்பின்பு அச்சிறுவனின் மாமா வந்து பார்த்துவிட்டு, உண்மையில் சுயநினைவை இழந்ததாக கூறி, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

அதன்பின்பு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் கோமா நிலைக்கு சென்ற சிறுவனுக்கு, உயிர்காக்கும் கருவிகளை வைத்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Contact Us