ஷங்கர் என்ன வச்சு படம் எடுங்க ப்ளீஸ்.. சரணடைந்த வடிவேலு

வடிவேலு சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கு சங்கரும் ஒரு காரணம் தான். தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக வலம் வந்த வடிவேலு தன்னுடைய குணங்களால் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறியிருக்கிறார். அரசியல் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் வடிவேலு நடிக்கும் படங்களில் பெரும்பாலும் அவரின் தலையீடு அதிகமாக இருப்பதாக இப்போது வரை பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். இயக்குனர்கள் ஒன்று சொன்னால் வடிவேலு வேறு சொல்வாராம்.

அப்படித்தான் ஷங்கர், வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற படத்தை எடுத்த ஆரம்பத்திலேயே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து. மேலும் படத்தில் நடிக்கும்போது இயக்குனர் சிம்புதேவனிடம் வடிவேலு பல காட்சிகளை மாற்றச் சொன்னதாக செய்திகள் வெளிவந்தது.

மேலும் அந்த படத்தை தயாரித்த ஷங்கரிடம் பஞ்சாயத்து போக அவரும் வடிவேலுவிடம் பேசி பார்த்துள்ளார். ஆனால் வடிவேலு, நான் சொல்ற மாதிரி படம் எடுத்தா நடித்துக் கொடுக்கிறேன் என கொடுத்த அட்வான்ஸ் உடன் சென்று விட்டார். அட்வான்ஸையும் திருப்பி தரவில்லை, படத்திலும் நடிக்கவில்லை.

Contact Us