செம போர் அடிக்குது…! ‘எவ்ளோ நாள் தான் தண்ணியிலயே கிடக்குறது…’ நமக்கும் ‘லைஃப்ல’ ஒரு ‘சேஞ்ச்’ வேணும் இல்லையா…! – வைரல் வீடியோ…!

கர்நாடக மாநிலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திடீரென ராட்சத முதலை ஒன்று மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் வலம் வந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

giant crocodile came down street public area Karnataka

முதலைகள்  பெரும்பாலும் நீர்நிலைகளில் தான் வாழ்ந்து வரும். எத்தனை காலம் தான் நீரில் வாழ்வது, ஒரு மாற்றம் இருக்கட்டுமே என்பது போல், கர்நாடக மாநிலத்தில் உள்ள கோகிலபனா என்ற பகுதியில் திடீரென மனிதர்கள் வாழும் வீதியில் ராட்சத முதலை ஒன்று புகுந்து உலா வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக அந்த முதலையை பிடித்துச் சென்று ஆற்றில் கொண்டுபோய் விட்டனர். ராட்சச முதலை ஒன்று தெருவில் சர்வ சாதாரணமாக உலா வந்ததை பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

Contact Us