மடு தேவாலயத்தை சிங்களவர்களிற்கு விற்றுவிட்ட விக்டர் சோசை மற்றும் பெப்பி ரொட்டி; தமிழ் தேசியத்தை சிதைக்கிறார்கள்!

இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது, தமிழ் மாகாணமான வடக்கில் சில இடங்களில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக்கப்படுகின்றமைக்கெதிராக தமிழ் உணர்வாளர்கள் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், மடு திருத்தலத்தில் பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ள பதாதைகளில்கூட சிங்கள மொழியை முன்னுரிமைப்படுத்தி உள்ளனர் மடு திருத்தல நிர்வாகத்தினர்.

இப்படியான செயற்பாடுகள் மூலம் முல்லைத்தீவில் உள்ள நீராவடி பிள்ளையார் ஆலயம், குறுந்தூர் மலை போன்றவை சிங்களவர்களுக்கு சொந்தமென தொல்பொருட் திணைக்களத்தின் உதவியுடன் உரிமை கோருவது போன்று, காலப்போக்கில் மடு திருத்தலமும் சிங்களவர்களுக்குரியது,

என்றும் இங்கு சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்றும் சொல்லுவதற்கான ஆதாரங்களை இப்படியான செயல்கள் மூலம் இவர்களே விதைக்கின்றார்களா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

Contact Us