ரூம்’ போட்டு ‘யோசிக்குறதுலாம்’ ஒண்ணுமே இல்ல…! இந்த ‘ஐடியா’லாம் அதுக்கும் மேல…! – எவ்ளோ ‘ட்ரிக்ஸா’ பிளான் பண்ணியிருக்காங்க…!

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நிலையில், பல மாதங்களாகவே தங்கக்கடத்தல் அதிகரித்து வருகிறது.

smuggling gold in jeans pant at the Kerala airport

இந்த விமான நிலையங்கள் வழியாக துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து அதிகமாக தங்கக் கடத்தல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

அப்போது காசர்கோட்டை சேர்ந்த சாபி (31) என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சந்தேகமடைந்த போலீசார், அவரை தனியே கூப்பிட்டு விசாரித்துள்ளனர். ஆனால், அவரது பேக்கில் தங்கம் எதுவும் இல்லை.

சாபி, தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்டின் உள்பகுதியில் தங்கத்தை உருக்கி பெயின்ட் போல் அடிப்பது போல் பூசி, அதன்மேல் லைனிங் துணியால் தைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

அவர் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், சாபி துபாயில் இருந்து வந்திருப்பதால் 2 வாரம் அவர் தனிமையில் இருக்கும் கெடு முடிந்த பின் அவரது முன்னிலையில் பேன்டில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Contact Us