ஆபிசர் ‘ரூமோட’ வாசலிலே ‘தாலிய’ தொங்கவிட்ட பெண்…! ‘இதுக்கு மேல பண்றதுக்கு ஒண்ணுமே இல்ல…’ – இப்போவாது நான் கேட்டத பண்ணி கொடுங்க…!

நிலம் மாற்றும் விவாகரத்தில் அதிகாரிகள் லட்சம் கேட்டதால், மனமுடைந்த பெண் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

woman hung the chain on the door of Tashildar\'s office

தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், மணலா கிராமத்தை சேர்ந்தவர் மங்கா. இவரின் கணவர் ராஜேசம், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த மங்கா அதிர்ச்சியடைந்து, தாசில்தார் அலுவலகம் சென்று, தன் கணவருக்கு சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு மாற்றி பட்டா வழங்க வேண்டும் என கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அந்த அரசு அதிகாரிகளோ லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாற்ற முடியும் என கண்டிப்புடன் கூறியுள்ளனர்.

அதிகாரிகளின் செயலால் மன வேதனை அடைந்த மங்கா, தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் தாலி மட்டுமே உள்ளது எனக்கூறி தாலியை தாசில்தார் அலுவலக வாயிலில் தொங்கவிட்டு, இதனை லஞ்சமாக வைத்து கொண்டாவது எங்களது நிலத்திற்கான பட்டாவை மாற்றி வழங்கும்படி கூறி கதறி அழுதார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Contact Us