தமிழர்களை கொலை செய்த இந்தியாவை எப்படி கொண்டுவந்தார் பஷில்; பெருமை கொள்ளும் இராஜாங்க அமைச்சர்!

போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவை திசைதிருப்ப பஷில் ராஜபக்ஷவே முயற்சிகளை எடுத்திருந்தார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், எமது ஆட்சிக்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியாக பல நாடுகளிடமும் மண்டியிடாமல் செயற்பட்டார். இதன்போது இந்தியாவின் முழு உதவியை பெற பஸில் ராஜபக்ஷவே சென்றார்.

மிகப்பெரிய போர்வெற்றியின் திரைமறைவில் இருந்தும் அவரே செயற்பட்டார் என்றார்.

Contact Us