மரத்தில் தொங்கவிட்டு இளம்பெண் சித்ரவதை.. அதிர்ச்சி காரணம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

இளம்பெண் ஒருவரை மரத்தில் கயிற்றை கட்டி தொங்கவிட்டு சிலர் சித்ரவதை செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரத்தில் இளம்பெண்ணை கயிற்றால் கட்டி தொங்கவிட்டு இளைஞர் ஒருவர் கயிற்றை பிடித்து இழுக்க சுற்றி இருக்கும் சிலர் அந்தப்பெண்ணை தாக்குகின்றனர். அந்தப்பெண் வலியால் கதறுகிறார். இந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்ததா அல்லது உத்தரகாண்டில் நடந்ததா என சிலர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தனர். பழங்குடியின பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ மத்தியப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் தெரியவந்தது. விசாரணையில் அலிராஜ்பூரில் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.

மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூரை சேர்ந்த பழங்குடியின பெண்ணுக்கு 19 வயதாகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்தப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவன் குஜாரத்துக்கு வேலை சென்றுள்ளார். தன்னையும் குஜராத்க்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். தன்னுடைய வீட்டிலே இருக்கும்படி சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதனால் கோபத்தில் இருந்த அந்த இளம்பெண் மாமியார் வீட்டைவிட்டு வெளியேறி தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதுகுறித்து அந்தப்பெண்ணின் குடும்பத்தினருக்கு மாமியார் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் உறவினர் வீட்டில் இருந்த மகளை சொந்த கிராமத்துக்கு அழைத்து வந்தனர். பெண்ணுக்கு அறிவுரைக்கூறி மாமியார் வீட்டுக்கு அனுப்பாமல் கட்டையால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதிலும் ஆத்திரம் தீராதவர்கள் அந்தப்பெண்ணை மண்ணில் தரதரவென இழுத்து வந்து கடுமையாக தாக்கி கயிற்றில் கட்டி மரத்தில் தொங்கவிட்டு தொடர்ந்து தாக்கியுள்ளனர். அந்தப்பெண்ணின் தந்தை சகோதரன் என சரமாரியாக தாக்கியுள்ளனர். வீட்டை விட்டு வெளியேறுவாயா.. இனிமேல் இங்கு வருவாயா எனக் கூறிக்கொண்டே தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை வேடிக்கைப்பார்த்த கிராம மக்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை.

Contact Us