மனைவியை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற நபர்; நடந்தது என்ன தெரியுமா?

திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இவரது மனைவி புவனேஸ்வரி. கடந்த மாதம் 22-ந் தேதி புவனேஸ்வரி திடீரென காணாமல் போனார்.

இந்த நிலையில் திருப்பதி அரசு ஆஸ்பத்திரி அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் புவனேஸ்வரி சடலமாக மீட்கபட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது புவனேஸ்வரியின் கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி புவனேஸ்வரியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து எடுத்துச் சென்று வனப்பகுதியில் எரித்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்த் ரெட்டியை தேடி வந்தனர்.கடப்பாவில் பதுங்கியிருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்ததால் ஆடம்பர செலவுக்கு பணம் தேவைப்பட்டது. மனைவியிடம் ஆடம்பர செலவிற்கு அடிக்கடி பணம் கேட்டு வந்தேன். புவனேஸ்வரி பணத்தை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடந்த மாதம் 21-ந் தேதி மீண்டும் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்தேன். அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி பெரிய சூட்கேசில் அடைத்து வைத்திருந்தேன்.

மறுநாள் யாருக்கும் தெரியாமல் சூட்கேசில் இருந்த உடலை காரில் வைத்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று எரித்தேன் என கூறினார்.

போலீசார் ஸ்ரீகாந்த் ரெட்டியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us