என் மனைவியின் பிரசவத்தை வெள்ளைக்காரன் தான் பார்க்கவேண்டும்- ஆசிய இனத்தவர் அல்ல லண்டனில் இன வெறி…

அன்று இரவு என்னை அவசரமாக மருத்துவமனை அழைத்தது என்கிறார் மருத்துவர் சீஷான். நான் அங்கே சென்றவேளை ஒரு கர்பிணி பெண்ணுக்கு. குறை மாதத்தில் குழந்தை பிறக்க இருந்தது. அவர் சற்று ஆபத்தான நிலையில் இருந்தார். உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருந்தது. நான் அந்த அறைக்குச் சென்றவேளை, திடீரென என்னை நோக்கி வந்த நபர் ஒருவர். என்னைப் பார்த்து, ஆசிய இன மருத்துவர் என் மனைவிக்கு வைத்தியம் பார்க்க முடியாது. வெள்ளை இன வைத்தியர் வேண்டும் என்று கூறி, என்னை இனவெறியோடு பார்த்தார். அங்கே நின்ற தாதி மன்னிக்க வேண்டும் சார் மன்னிக்க வேண்டும் சார் என்று கத்திக் கொண்டு ஓடி வந்தார். நானும் அவர் என்னிடம் தான் மன்னிபுக் கேட்க்க நினைக்கிறார் என்று முதலில் நினைத்து விட்டேன். ஆனால் அது அப்படி அல்ல… அவர்…

மன்னிப்பு கேட்டது, என்னைப் பார்த்து இன வெறியில் கத்திய அந்த நபரிடம் தான் என்று கூறுகிறார் மருத்துவர் சிஷான். என்ன கொடுமை இது. மருத்துவம் என்பது கடவுளுக்கு சமமான ஒன்று. அதுவும் சிஷான் போன்ற மருத்துவர்கள், டபுள் டிகிரி எடுத்து, பெரும் பட்டப் படிப்பை முடித்த அனுபவம் மிக்க மருத்துவர். ஆனால் இந்த இனவெறி பிடித்த சில வெள்ளை இன மக்கள் இன்னும் லண்டனில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தான், மிகவும் கசப்பான விடையம்.

Contact Us