நெஞ்சை பதற வைத்த சம்பவம்.. ஒரே குடும்பமே அழிந்துபோன சோகம்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று முன்தினம் நடந்த கோர விபத்து வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்தது. கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதனால் நிலைகுலைந்த கார், மற்றொரு லாரியின் பின்னால் மோதியது. மீண்டும் கண்டெய்னர் லாரி மோத, இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கி உருக்குலைந்த கார், சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. அதேசமயம் கண்டெய்னர் லாரியும் சாலையில் கவிழ்ந்தது.

காரில் பயணம் செய்த குழந்தை உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் மீது லாரி மோதிய காட்சிகள் முன்னால் சென்ற ஒரு வாகனத்தில் உள்ள கேமராவில் பதிவானது.

நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Contact Us