எல்லோரும் சந்தோசமாக போய்க்கொண்டிருந்திருப்பார்கள்; ஒரு செக்கனில் இப்படி நடந்திட்டே!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நரோவல் நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கார் ஒன்றில் புறப்பட்டு உள்ளனர். அந்த காரில் 3 குழந்தைகள் மற்றும் 5 பெரியவர்கள் என மொத்தம் 5 பேர் பயணம் செய்துள்ளனர்.

அவர்களது கார் முசாபராபாத் நகரில் இருந்து வடகிழக்கே 65 கி.மீ. தொலைவில் ஜுரா பண்டி கிராமம் நோக்கி செல்லும்போது திடீரென ஆற்றில் பாய்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஆற்று நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தின் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி மாவட்ட பேரிடர் மேலாண் அதிகாரி அக்தர் அயூப் கூறும்போது, காரின் டயர் ஒன்று திடீரென வெடித்துள்ளது.

இதில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஆற்றில் மூழ்கியுள்ளது. காரில் இருந்த 2 குழந்தைகள் தூக்கி வெளியே வீசப்பட்டு உள்ளனர். படுகாயமடைந்து கிடந்த 2 பேரையும் உள்ளூர் மக்கள் மீட்டு ராணுவ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆற்றில் மூழ்கிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு உள்ளன. காரும் மீட்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். 2 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்து இருக்க கூடும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விபத்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமர் ராஜா பரூக் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Contact Us