முல்லைத்தீவில் பதற்றம்; இளைஞன் மீது இராணுவம் சரமாரியான தாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது

ஆனந்தபுரம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக இரணைப்பாலை சந்திக்குச் சென்ற இளைஞர் ஒருவர் மாஸ்க் அணிந்து செல்லாத நிலையில், மாஸ்க் அணிந்து செல்லுமாறு கூறி இராணுவ சிப்பாய் ஒருவர் குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது.

குறித்த இளைஞர் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல் நடத்திய நிலையில் குறித்த இடத்தில் மக்கள் ஒன்று கூடி இராணுவத்தினருடன் முரண்பட்ட நிலை தோற்றம் பெற்றிருந்தது.

மாஸ்க் அணியாத காரணத்தால் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முடியுமா? என குறித்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிசார் மக்களை குறித்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us