எவ்ளோ நேரம் தான் மரத்துலையே இருப்பீங்க…’ ‘கொஞ்சம் இறங்கி வந்து நாங்க சொல்றத கேளுங்க…’ – சுகாதாரத் துறை அதிகாரிகள் வந்த உடனே ‘தெறித்து’ ஓடிய கிராம மக்கள்…!

கோயம்பத்தூரில் உள்ள பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த வந்த சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கண்டு தப்பி ஓடிய கிராம மக்கள், ஒளிந்து கொண்டனர்.

Coimbatore villagers fled finding health officials vaccinate

சென்னையை விட அதிகமாக கோயம்பத்தூரில் பரவிக் கொண்டிருந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் மற்றும் ஊரகப் பகுதியில் தினமும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளைச் சுகாதாரத் துறையினர் செலுத்தி வருகின்றனர்.

திட்டத்தின்படி, தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் போரத்தி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு 500 தடுப்பூசிகளுடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் நேற்றைக்கு முன்தினம் (02-06-2021) சென்றனர். தடுப்பூசி மீது பரப்பப்பட்ட புரளி செய்திகளை நம்பி, மருத்துவக் குழுவினரைக் கண்டதும், கிராம மக்கள் அங்கிருந்து தப்பிச் ஓடினர்.

வயதானவர்கள் தங்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு சில நோய்கள் உள்ளதாகக் கூறி தடுப்பூசி வேண்டாமென சுகாதாரத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி சமாதானம் செய்த பின்னர், சிலருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

(வாட்சப் செய்திகள், வதந்திகளை பரப்பும் வீடியோக்களை நம்பாமல் முறையாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் செலுத்துவது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அத்தியாவசிய கடமை ஆகும்)

Contact Us