அவ்வளவு தான் மேட்டர் ஓவர்: கொரோனாவோடு வாழப் பழகுங்கள் என்று சொல்ல தயாராகும் பொறிஸ் !

ஜூலை 19ம் திகதியை சுதந்திர நாளாக அறிவிக்க உள்ள பொறிஸ் ஜோன்சன், எமக்கு வரும் காச்சல் மற்றும் தடிமன் போல கொரோனாவும் ஒரு சாதாரண தொற்று நோய் தான். எனவே அதனுடன் வாழ பழகிக் கொள்ளவேண்டும் என்று உரையாற்ற உள்ளார். இதனை அவரது அலுவலகம் உறுதியும் செய்துள்ளது. என்ன நடந்தாலும் பரவாயில்லை, ஜூலை 19 அன்று தான் முடிவு எடுத்தது போல, சுதந்திர தினம் அறிவிக்கப்படும் என்ற பிடிவாதத்தில் அவர் உள்ளார். இந்திய கொரோனா, மற்றும் டொல்டா கொரோனா இவை குறித்து அவர் எதனையும் பேச விரும்பவே இல்லை என்று தெரிகிறது… ஒட்டு மொத்ததில் …

கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்பது தான் தற்போது ஒரே சுலோகமாக உள்ளது. முடியவேண்டிய வயதானவர்கள் எல்லாருமே பரலோகம் சென்று விட்டார்கள். அவர்களை 10 வருடங்களுக்கு அரசு பராமரித்திருக்க வேண்டும். பென்ஷன் காசு கொடுத்திருக்க வேண்டும். எப்படி பார்த்தாலும் அரசுக்கு பெரும் லாபம் தான். மீதம் தொத்துவறியில் இருந்த முதியவர்களும் இறந்து விட்டார்கள். அது போக வேறு நோயால் பிடிக்கப்பட்டு இருந்த நபர்களும், முடிந்து விட்டார்கள். அவர்கள் வைத்திய செலவும் இனி இல்லை. இனி எப்படி என்றாலும் பேசலாம் தானே…

Contact Us