OTT தளங்களில் வெடிக்கும் புலம்பெயர் தமிழ் பட்டாசுகள் இவர்கள் தான் பாருங்கள் மக்களே

உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் தங்கள் கலைத்திறனை பறைசாற்றவேண்டுமொன்றால் தமிழக மேடைகளிலும் திரைப்படங்களிலும்தான் சாதனைகளை நிலைநாட்டவேண்டும் என்ற காலம் கரைந்து, இப்போது, எல்லோர் வீட்டுக்குள்ளேயும் – எல்லோர் கைகளிலேயும் வந்துவிட்ட OTT தளங்களில் நுழைந்து பிரபலமாகுவதுதான் தற்கால ஸ்டைலாகவும் டிஜிட்டல் யுகத்தில் சாதனையாகவும் வளர்ந்துவிட்டது.அந்த வகையில், OTT தளத்தில் தற்போது பிரபலங்களாக பிரம்மிக்கவைக்கும் புலம்பெயர் தமிழ் நடிகைகள், பல புலம்பெயர் கலைஞர்களுக்கு உதாரணிகளாகியிருக்கிறார்கள்.

அவர்கள் சிலர் –

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்தவர் ஜெரால்டீன் விஸ்வநாதன். இந்திய தந்தைக்கும் சுவிஸ்லாந்து தாயாருக்கும் பிறந்த இவர், 2018 இல் “ப்ளொக்கர்” படத்தில் ஆரம்பித்து “ஹால” அதன்பின்னர் “பாட் எடியூகேஷன்” போன்ற படங்களில் பெரும் நட்சத்திரங்களோடு நடித்து பிரபலமாகியிருக்கிறார்.

கனடாவை சேர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன் பற்றி அதிகம் சொல்லத்தேவையில்லை. சமீபத்தில் வெளியான நெட் ப்ளிக்ஸ் தொடர் மூலம் பரந்த கவனிப்பை பெற்றவர். கனடாவை சேர்ந்த 19 வயதுடைய பட்டாசு. பல்லாயிரக்கணக்கான நடிகைகளின் மத்தியில், நெட் ப்ளிக்ஸ் தொடருக்காக தெரிவானவர்.

நோர்வே ஒஸ்லோவை சேர்ந்த தனு சுனத் ஈழத்தமிழ் பெற்றோருக்கு பிறந்த இளம் நடிகை. இவரும் நெட் ப்ளிக்ஸ் தொடர் மூலம் பிபலமானவர். தற்போது லண்டனிலிருந்து நடிப்புத்துறையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

சிமோன் அஷ்லி எனப்படுகின்ற சிமோன் அஷ்வின் பிள்ளை, லண்டனில் இந்திய பெற்றோரான குணசேகரன் – லதா தம்பதிகளுக்கு பிறந்து, பல திரைப்படங்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார். “பாலியல் கல்வி” என்ற ஒரே தொடரோடு மெகா பிரபலமானவர்.

உலகின் ஒரு மூலையில் அதர பழசான தமிழ் சீரியல்களுக்குள் மூக்கை சீறி சிந்திக்கொண்டிருக்கும் பெண்டிர்கள் ஒருபுறம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கத்தில் இவ்வாறான சாதனைகளை இன்னொரு தலைமுறை பெண்கள் முழு வீச்சில் விளாசிக்கொண்டிருக்கிறார்கள்.

Contact Us