தன்னுடைய ஆட்களையே கொல்ல திட்டம் போட்ட சிங்கள புலனாய்வு- வெடிக்கும் ரகசியங்கள் இதோ…

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முதலாவது சூத்திரதாரி என மேல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட அப்போதைய கிரிதலே இராணுவ முகாமில் கட்டளை இடும் அதிகாரியாக செயல்பட்ட கேனல் சம்மி குமாரரத்ன என்ற கொலையாளி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட நிலையில்….

அவர் அந்தப் பிரிவில் இருந்து கொண்டு பாதாள உலகக் குழு தலைவர்களுடன் தொடர்பினை வைத்து ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை வைத்துக் கொண்டு பாரிய அளவு கப்பம் பெற்று வந்ததாகவும். இந்த இரகசியங்களை அறிந்த புலனாய்வு பிரிவு சிப்பாய்கள் சிலரை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தி குறித்த புலனாய்வுப் பிரிவு சிப்பாய்கள் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர் என்ற விடையம் அதிர்வு இணையத்திற்கு கசிந்துள்ளது.

Contact Us