கள்ளக்காதலனை கரம் பிடிக்க பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்!

குழந்தை கொலை
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாந்தனூர் பகுதியை சேர்ந்தவர் மோகனன். விவசாயி. அவருடைய மனைவி ரேஷ்மா (வயது 24). கர்ப்பிணியாக இருந்த ரேஷ்மாவுக்கு கடந்த மாதம் அழகான பெண் குழந்தை வீட்டிலேயே பிறந்தது.ஆனால் கணவர் மற்றும் வீட்டில் யாருக்கும் தெரியாமல், ரேஷ்மா அன்று இரவே கழுத்தை நெரித்து பச்சிளம் குழந்தையை கொலை செய்து
குழிதோண்டி புதைத்து விட்டார். குழந்தை குறித்து மோகனன் கேட்டபோது, பிறந்தவுடன் அது இறந்து விட்டதாக கூறினார்.ஆனால் ரேஷ்மா மீது சந்தேகம் அடைந்த மோகனன் விசாரித்தார். அப்போது, குழந்தையை கொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது. எனவே இதுகுறித்து பாந்தனூர் போலீஸ் நிலையத்தில் ரேஷ்மா மீது மோகனன் புகார் செய்தார்.
இதயத்தை இரும்பாக்கிய கள்ளக்காதல்
அதன்பேரில் பாந்தனூர் போலீசார் ரேஷ்மாவிடம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
ரேஷ்மாவுக்கு, முகநூல் மூலம் அனந்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் நேரில் சந்திக்காமலேயே பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் ேரஷ்மா, அனந்துவின் காதல் வலையில் விழுந்தார்.இதையடுத்து அனந்துவை திருமணம் செய்ய ரேஷ்மா ஆசைப்பட்டார். இதற்கு குழந்தை இடையூறாக இருக்கும் என்று ரேஷ்மா கருதினார். கள்ளக்காதல் கண்ணை
மறைத்தது மட்டுமின்றி, இதயத்தையும் இரும்பாக்கி விட்டது.10 மாதம் சுமந்து, தான் பெற்றெடுத்த பிஞ்சு குழந்தை என்று கூட பாராமல் நெஞ்சை கல்லாக்கி விட்டு கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்து விட்டார். அதேநேரத்தில் குழந்தையை கொலை செய்தது பற்றிய விவரத்தை, தனது காதலன் அனந்துக்கு அவர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே விசாரணைக்கு பிறகு ரேஷ்மாவை போலீசார் கைது செய்தனர்.
ஆண் குரலில் பேசிய பெண்கள்
இந்தநிலையில் குழந்தையை கொலை செய்ய ரேஷ்மாவை தூண்டியதாக, அவரது கள்ளக்காதலன் அனந்துவை கைது செய்ய போலீசார் தீர்மானித்தனர். இதையடுத்து அனந்துவின் செல்போன் செயல்பாட்டை போலீசார் ஆய்வு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை.இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், ரேஷ்மாவுடன் முகநூல் மூலம் அனந்து என்ற பெயரில் பேசி பழகியது 2 பெண்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.இதனையடுத்து அந்த பெண்கள் குறித்த விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அவர்கள் களுவாதிகள் என்ற ஊரை சேர்ந்த ரஞ்சித் மனைவி ஆர்யா (23), ராதாகிருஷ்ணன் மகள் (22) என்று தெரியவந்தது.இந்த 2 பெண்களும் அனந்து என்ற பெயரில் இனிக்க, இனிக்க ரேஷ்மாவிடம் ஆண் குரலில் பேசி நாடகம் ஆடியுள்ளனர். ஒரே குரலில், 2 பெண்களும் ஆண் போல பேசியது கூட ரேஷ்மாவுக்கு தெரியவில்லை.சுமார் ஒரு வருட காலம் அவர்கள் தொடர்ந்து ரேஷ்மாவிடம் பேசினர். ஆனால் அனந்து தன்னை உண்மையாகவே காதலிப்பதாக கருதி ரேஷ்மாவும் காதலிக்க தொடங்கினார்.
ஆற்றில் குதித்து தற்கொலை
கனிவான பேச்சு மூலம் மனதை பறிகொடுத்த ரேஷ்மா, தனதுகள்ளக்காதலனை கரம் பிடிக்க குழந்தையை தீர்த்து கட்டினார். கள்ளக்காதலனை மணப்பதற்காக ரேஷ்மா, பெற்ற குழந்தையை கொலை செய்த விவரம் பத்திரிகைகளில் வெளியானது. இது ஆர்யாவுக்கும், சுருதிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் உறைந்தனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும், அங்குள்ள ஆற்றில் ஒரே நேரத்தில் குதித்து தங்களது உயிர்களை மாய்த்து கொண்டது நேற்று முன்தினம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. ரேஷ்மா கைது செய்யப்பட்ட 2 நாட்களில் இந்த பெண்கள் தற்கொலை செய்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு விபரீதமானது
முகநூல் மூலம் விளையாட்டாக 2 பெண்கள் நடத்திய நாடகம், ஒரு குழந்தையை கொலை செய்யும் அளவுக்கு ஒரு தாயை கல்நெஞ்சம் ஆக்கி விட்டது. ஆர்யா, சுருதி ஆகியோரின் உயிரை தற்கொலை என்னும் கொடிய அரக்கன் பறித்து விட்டான். விளையாட்டாக தொடங்கிய முகநூல் பழக்கம், விபரீதத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Contact Us