2 வயது குழந்தையின் துணிச்சலான செயல்; பெத்தா இப்படியொரு பிள்ளையை பெறணும்!

சுயநினைவின்றி இருந்த தாயை மீட்க 2 வயது குழந்தை ரயில்வே போலீஸாரின் உதவியை நாடியுள்ளது.

உத்தரப்பிரதேச உள்ள ரயில்நிலையத்தின் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் 30 வயது மதிக்கத்த பெண் ஒருவர் 2வயது பெண் குழந்தை மற்றும் ஒரு 6மாத கைக்குழந்தையுடன் இருந்துள்ளார். அந்தப்பெண் திடீரென சுயநினைவுயின்றி மயக்கிவிட்டார். அவரது கைக்குழந்தையும் மயக்கநிலையில் இருந்துள்ளது. 2 வயது பெண் குழந்தைக்கு அம்மாவுக்கும், தம்பிக்கும் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

கொஞ்ச நேரம் தாயுடனே அந்தக்குழந்தை இருந்துள்ளது. ரயில்வே பிளாட்பாரத்தில் அங்கும் இங்கும் சுற்றிய அந்தக்குழந்தை அசைவின்றி இருக்கும் தனது அம்மாவை எழுப்ப முயற்சி செய்துள்ளது. ஆனால் அந்தப்பெண் எழுந்திருக்கவில்லை. குழந்தைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

குழந்தை தான் இருந்த பிளாட்ஃபார்மை விட்டு இறங்கி சென்று அங்கு பணியில் இருந்த ரயில்வே பெண் போலீஸை அழைத்துள்ளது. யாரோ குழந்தையை தவறவிட்டு சென்றதாக எண்ணிய பெண் போலீஸ் குழந்தையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்க எண்ணினார். ஆனால் குழந்தை எதோ சொல்ல வருகிறாள் ஆனால் அவளால் அதனை சொல்ல முடியவில்லை. எங்கோ பார்த்து குழந்தை கைக்காட்டியுள்ளது. அந்தப்பெண் காவலருக்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தை நடக்க ஆரம்பித்துள்ளது பெண் காவலரும் குழந்தையை பின்தொடர்ந்துள்ளார். அங்கு ஒரு பெண் கைக்குழந்தையுடன் மயங்கிய நிலையில் இருப்பதைக்கண்டு காவலர் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாய் மற்றும் அவரது கைக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த இளம்பெண் குறித்த விவரங்கள் தெரியவில்லை. மயக்கநிலையில் இருக்கும் அந்தப்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பிய பின்னரே முழுவிவரமும் தெரியவரும் என போலீஸார் கூறுகின்றனர். இவ்வளவு சின்ன வயதில் குழந்தை ஒரு துணிச்சலான விஷயத்தை செய்திருக்கு என குழந்தைக்கு போலீஸார் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Contact Us