ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கைக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் – புதிய புகார் காரணம் என்ன?

தனது யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமாக பேசிவரும் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்கின்ற ரவுடி பேபி சூர்யா. தனது ஆடல், பாடல்களால் டிக்டாக்கில் பிரபலமானவர். ஆரம்பத்தில் ஆடலும் ,பாடலுமாக இருந்தவர் அதிக லைக்குகளை வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஒருகட்டத்தில் தனது ஆடைகளை குறைத்து ஆட தொடங்கினார்.

அதை தட்டிக்கேட்டவர்களை மிரட்ட தொடங்கியதால் சுப்புலட்சுமி என்ற தனது பெயரை ரவுடி பேபி என்று மாற்றி அழைக்க தொடங்கினார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் ரவுடி பேபி சூர்யா யூடியூபிலும் தனது ஆபாச, அத்துமீறல்களை அரங்கேற்ற தொடங்கினார். இப்படி ஆபாசமாக பேசுவது தனது உரிமை என்று மது போதையில் ஆரவாரம் செய்து வந்தார்.

ரவுடி பேபியின் சண்டித்தனம் அதிகரிக்க அதிகரிக்க அவர் மீதான புகார்கள் காவல்நிலையத்தில் குவியத்தொடங்கியன. திருப்பூர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்கள் குவிந்தன.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் புனிதவள்ளி, சமூக ஆர்வலர் சுமித்ரா, எல்லை பாதுகாப்பு படை வீரர் காளிராஜ் ஆகியோர் கூட்டாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் ரவுடி பேபி சூர்யா மீது புதிய புகார் ஒன்றை கொடுக்க வந்தனர்.

இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் இருக்கும் இது போன்ற பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு டிக்டாக் பிரபலமான லக்கி இலக்கியா என்பவரும், ரவுடி பேபி சூர்யாவும் பேசி கொள்வது போன்ற ஆடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது.

சர்வீஸ் என்ற ‘கோர்ட் வேட்’டில் பேசி கொள்ளும் இந்த ஆடியோ தொடர்பாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு தானும், இலக்கியாவும் பேசிக்கொண்ட ஆடியோ தான் இது என்று ரவுடி பேபி சூர்யா ஒப்புக்கொண்டுள்ள நிலையில் தொடர்ந்து வரும் புகார்களை விசாரிக்க தொடங்குவார்களா போலீசார்.

Contact Us