இந்தாரும் சாப்பிடும்; பிரதமர் மோடிக்கு 2600 கிலோ மாம்பழங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் இதர தலைவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மொத்தம் 2 ஆயிரத்து 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி வைத்தார்.

இந்தியா-வங்காளதேசம் இடையிலான நட்புறவின் அடையாளமாக அவர் இப்பரிசை அளித்தார்.

260 பெட்டிகளில் இந்த மாம்பழங்கள் வைக்கப்பட்டு, சரக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. எல்லையைக் கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தபோது, கொல்கத்தாவில் உள்ள வங்காளதேச துணை தூதரகத்தின் முதன்மை செயலாளர் முகமது சமியுல் காதர் வரவேற்றார்.

Contact Us