ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; பதறவைத்த சம்பவம்!

மராட்டியத்தின் மும்பை நகரில் நவசேவா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 2 கன்டெய்னர்களை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில், சர்வதேச சட்டவிரோத சந்தையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 293.81 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். ஒரு கன்டெய்னருக்கு தலா 3 பைகள் என மொத்தம் 6 பைகளில் அவை வைக்கப்பட்டு இருந்துள்ளன.

ஈரானின் சஹ் பஹார் துறைமுகம் வழியே இந்த கன்டெய்னர்கள் நமது நாட்டுக்கு வந்துள்ளன. இவற்றை இறக்குமதி செய்த வகையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான பிரபஜித் சிங் என்பவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி விவரங்களை பெற்றுள்ளனர்.

அவரை பன்வெல் கோர்ட்டில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தி, பின்னர் தங்களது காவலில் எடுத்து உள்ளனர். வருகிற 12ந்தேதி வரை அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

இதேபோன்று பிரபஜித் சிங்கின் 2 கூட்டாளிகளும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

Contact Us