தொடர்பில் இருந்தவருக்கு இந்த நிலையா? இங்கிலாந்து இளவரசி எடுத்த முடிவு!

இதையொட்டி இளவரசர் வில்லியமின் மனைவியும் இளவரசியுமான கதே கடந்த சில நாட்களாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அது மட்டுமின்றி, டென்னிஸ் ரசிகையான கதே, கடந்த வெள்ளிக்கிழமை விம்பிள்டன் நகருக்கு சென்று டென்னிஸ் போட்டியை கண்டு ரசித்தார். இந்தநிலையில் இளவரசி கதேவுடன் தொடர்பில் இருந்த ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்க இளவரசி கதே தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இதுகுறித்து கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இளவரசி கதேவுக்கு வைரஸ் தொடர்பான எந்தவித அறிகுறிகளும் இல்லை. எனினும் அரசின் அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி இளவரசி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 10 நாட்களுக்கு அவர் தனிமையில் இருப்பார்” கூறப்பட்டுள்ளது.

39 வயதான இளவரசி கதே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டு கொண்டுள்ளார்.

Contact Us