சீனாவின் குப்பை தொட்டியாக மாறவுள்ள இலங்கை; அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்!

சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை சேதன பசளை எனக் கூறி விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் நுவரெலியாவில் உள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளை இல்லாமல் செய்து இலங்கை நாட்டை சீனாவின் காலனியாக மாற்றுவதே இந்த அரசாங்கத்தின் திட்டம். இதற்கு விவசாயிகள் ஒரு போதும் ஒத்துழைக்க மாட்டார்கள் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று (05) காலை நுவரெலியா பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள புதிய மார்கட் கட்டிடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

Contact Us