நாட்டை விட்டு ஓடினால் போதும் என்று நினைக்கும் ஆசி அரசு- ஆனால் பாராட்டு மழை அர்ஷ்தீப் என்ற மாணவரால் !

தனது நாட்டுக்குள் வேற்று இன மக்கள் வந்து குடியேறிவிடக் கூடாது என்பதில் எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருந்து வரும் ஒரே ஒரு நாடு அவுஸ்திரேலியா தான். மிகப் பெரிய கண்டமான அவுஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் குடியேற முடியும். ஆனால் அன் நாட்டு அரசு அதனை விரும்புவதே இல்லை. இன் நிலையில் இந்தியாவை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் என்ற 25 வயது இளைஞர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தங்கி படித்தார். இந்நிலையில் அவரின் கிட்னி பாதிக்கப்பட்டது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அரசு, இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தனி விமானம் மூலம் உடனடியாக மாணவரை இந்தியாவிற்கு அனுப்பியது.

மேலும் சிறப்பு மருத்துவ உபகரணங்களும், அந்த விமானத்தில் இருக்கின்றன. இந்த மாணவர் இன்று மாலை இந்தியா வந்தடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் புதுடெல்லி வந்தடைந்தவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு, அவருக்கு குருகிராமில் இருக்கும் மேதாந்தா மருத்துவமனையில் மேல்சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது ஆஸ்திரேலிய அரசின் துரிதமான செயல்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

காசு போனாலும் பரவாயில்லை ஆளை முதலில் நாட்டை விட்டு அனுப்பினால் போது என்று தான் அவுசி அரசு உள்ளது.

Contact Us