சீனாவில் அரசு அதிகாரிகளை 10 வருடங்களாக அலறவிட்ட பெண்!

சீனாவில், நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கும்போது அந்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை அதன் உரிமையாளரான பெண் ஒருவர் அந்த இடத்தை காலி செய்ய மறுத்துள்ளார். அந்த இடத்துக்கு பதிலாக இழப்பீடு வழங்குவதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் தெரிவித்தும், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.10 ஆண்டுகளாக அந்த பெண்ணிடம் பேசியும், அவர் தன் வீட்டை விட்டுக்கொடுக்க மறுக்கவே, அதிரடியாக ஒரு முடிவு எடுத்தார்கள் அதிகாரிகள். நெடுஞ்சாலையை அமைப்பதையும் விடவில்லை, வீட்டையும் பாதிக்கவில்லை. அழகாக வீட்டைச் சுற்றி நெடுஞ்சாலையை அமைத்துவிட்டார்கள்.

வீடு நடுவில் அமைந்திருக்க, அதன் இருபக்கமும் வளைவாக சாலையை அமைத்துவிட்டார்கள்.

Liang என்னும் அந்த பெண், அரசு, தனக்கு தனது வீட்டுக்கு பதிலாக வேறு நல்ல இடத்தில் வீடு கொடுக்காததால்தான் தனது வீட்டை விட்டுக் கொடுக்கவில்லை என்கிறார்.

ஆனால், விடயம் என்னவென்றால், இரு சாலைகளுக்கு நடுவே அமைந்துள்ள அந்த வீடு இப்போது பிரபலமாகிவிட்டது.

Contact Us