“சமூக இடைவெளி வரும் 19-ஆம் திகதிக்கு பின் கட்டாயமாக இருக்காது” – பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் அனைத்து சட்டபூர்வமான கொரோனா விதிகள் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் குறைந்து வந்தாலும், இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் இன்னும் பரவி வருகிறது. ஆனால், இறப்பு அந்தளவிற்கு இல்லை. அந்த வைரஸிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், நாம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் கொரோனா விதிகள் அனைத்து விலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த டெல்டா வைரஸால் அது தள்ளிப் போனது. இது வரும் 19-ஆம் திகதி கொரோனா விதிகள் விலக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், பிரதமர் போரிஸ்ஜோன்சன் மற்றும் புதிய சுகாதார செயலாளர் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது.

அதன் படி சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த போரிஸ் ஜோன்சன், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவது போன்றவை வரும் 19-ஆம் திகதிக்கு பின் கட்டாயமாக இருக்காது என்று உறுதிபடுத்தியுள்ளார். அதே சமயம் பொது போக்குவரத்து மற்றும் விருந்தோம்ல் அதாவது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது பற்றி ஊக்குவிக்கபடும்.

திட்டமிட்டபடி வரும் 19-ஆம் திகதி கொரோனாவின் அனைத்து சட்டவிதிகளும் அகற்றம் படும், இது குறித்த அறிவிப்பு வரும் 12-ஆம் திகதி உறுதிபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பப்கள் மற்றும் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்ற தேவையில்லை, வெளியில் மற்றும் உட்புறங்களில் சந்திப்பதற்கான அனைத்து சட்ட வரம்புகளும் நீக்கப்படுவதாக கூறிய போரிஸ், இரவு விடுதிகள் உட்பட அனைத்து வணிகங்களையும் மீண்டும் திறக்க அனுமதிப்போம் என்று கூறினார். இசை நிகழ்ச்சிகள், நாடக மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவோம் என்று கூறியுள்ளார்.

Contact Us