வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற கொலை!-நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்புமாறும்,  சி.சி.டி.வி இன் வன்தகடை (Hard Disk) பொலிஸார் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கில் நான்கு சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us