பணக்காரர் ஆக்கும் 50 பைசா’… ‘இதுக்கு இவ்வளவு டிமாண்ட்டா’?… வெளியான ஆச்சரிய தகவல்!

பழைய நாணயங்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்தது வாங்கத் தயாராக உள்ள பல தனிநபர்களும் அமைப்புகளும் உள்ளன.

Get Rs 1 lakh in exchange of 50 paisa coin

சமீப நாட்களாகப் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு விலை போவதைப் பார்க்க முடிகிறது. 2011-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் 25-50 பைசா நாணயங்களைப் புழக்கத்தில் விடுவதை நிறுத்தியது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அரசாங்கம் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாகவே, இந்த நாணயங்களை மக்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.

Get Rs 1 lakh in exchange of 50 paisa coin

ஆனால் இந்த நாணயங்கள் அப்போது பயனற்றவையாக இருந்தன. இருந்தாலும் இப்போது இந்த நாணயங்கள் பலரைப் பணக்காரர்களாக மாற்றலாம் என்ற நிலையில் உள்ளது. ஒரு பழைய 50 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால், அதனை 1 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருக்கிறார்கள். அதற்காக நீங்கள் அலைய வேண்டியதில்லை. இணையதளத்தைப் பயன்படுத்தி வலைத்தளங்களின் மூலமாகவே பழைய ரூபாய் நோட்டுக்களையும் நாணயங்களையும் மாற்றி பணம் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் இணையதளத்தில் உள்நுழைந்து 2011 இல் தயாரிக்கப்பட்ட பழைய நாணயத்தை விற்க வேண்டும். உங்கள் நாணயம் வெள்ளி நிறத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே பிடி. OLX, IndiaMART.com, Coin Bazaar போன்ற வலைத்தளம் உங்களை விற்பனையாளராகச் சேர அனுமதிக்கிறது. நீங்கள் இணையதளத்தில் விற்பனையாளராகப் பதிவு செய்து அதன் பின்னர் நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும்.

Get Rs 1 lakh in exchange of 50 paisa coin

அங்கு மக்கள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள். அதிகபட்ச ஏலத்தில் ஈடுபடும் நபர் நாணயத்தை வாங்கிக்கொள்வார். வாங்குபவருடன் பேச்சுவார்த்தை நடத்த உங்களுக்கு அனுமதி உண்டு. இந்த இணையத்தளங்களில், உங்களுக்கு வேண்டிய பழைய நாணயங்களையும் வாங்கிக்கொள்ளலாம்.

Contact Us