யாருமே எதிர்பார்க்கல’!.. நேருக்குநேர் சந்தித்த முருகன்கள்.. அப்போ செய்தியாளர் கிண்டலாக கேட்ட கேள்வி.. ‘நச்’ன்னு பதிலளித்த துரைமுருகன்..!

டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், பாஜக தமிழக தலைவர் எல்.முருகனும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்ட சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Minister Duraimurugan meets BJP L Murugan accidentally in Delhi

திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் மற்றும் தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணை ஆகியவை குறித்து பேசினார்.

Minister Duraimurugan meets BJP L Murugan accidentally in Delhi

Minister Duraimurugan meets BJP L Murugan accidentally in Delhi

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு சாணக்கியபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு துரைமுருகன் வந்துக் கொண்டிருந்தார். அந்த சமயம், அதே தமிழ்நாடு இல்லத்தில் தங்கிருந்த பாஜக தமிழக தலைவர் எல்.முருகனும், அமைச்சர் துரைமுருகனும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டனர்.

Minister Duraimurugan meets BJP L Murugan accidentally in Delhi

உடனே எல்.முருகன், ‘அய்யா வணக்கம், நல்லா இருக்கீங்களா?’ என துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘உங்களுடைய நண்பர்கள் வந்திருக்காங்க போல?’ என கிண்டலாக அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் நண்பர்கள்தான்’ என பதிலளித்தார். இதனால் அந்த இடத்தில் சற்று கலகலப்பு ஏற்பட்டது.

Contact Us