ஸாரி ஃப்ரண்ட்…! ‘எனக்கு வேற வழி தெரியல…’ ‘நான் ஏன் உங்க வீட்ல திருடுறேன்னா…’ – வேலைய முடிச்சிட்டு ‘லெட்டர்’ எழுதி வச்ச திருடன்…

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் கமலேஷ் கட்டார் என்பவர் வசித்து வருகிறார், இவர் சத்தீஸ்கர் மாநில காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

mp thief wrote a letter saying stolen your house no reason.

இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டினுள் சென்று பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டதும் செய்வதறியாது உறைந்து போயினர். வீட்டின் மேஜையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீஸ்காரரின் மனைவி எடுத்து படித்து பார்த்துவிட்டு அதிர்ந்து போய்விட்டார்.

இதுபற்றி காவல்துறையினர் தெரிவிக்கையில், ‘வீட்டிற்குள் புகுந்த திருடன், வீட்டில் இருந்த பணத்தை  திருடி விட்டு  கடிதம் ஒன்றையும் எழுதியிருப்பது கிடைத்துள்ளது. அதில், மன்னிக்கவும் நண்பரே…! ஆனால் நான் தற்போது சிக்கலான சூழலில் சிக்கிக் கொண்டேன். என்னுடைய கடமையை நான் இந்த நேரத்தில் செய்யாவிட்டால், என் நண்பன்  சென்று விடுவான். அவனது உயிர் எனக்கு முக்கியம்.

Contact Us