ஏசி ‘விலைய’ பார்த்து ‘இன்ப’ அதிர்ச்சியான வாடிக்கையாளர்கள்… ‘காலியாகிட போகுது, சீக்கிரம் புக் பண்ணிடுவோம்…’ – கொஞ்ச நேரத்துலையே ‘அமேசானில்’ நடந்த அதிரடி டிவிஸ்ட்…!

ஒரு ஏ.சி ரூ.5,900-க்கு விற்பனை என அமேசான் நிறுவனம் அறிவித்த நிலையில் ஆர்டரில் அமேசான் ஆப் ஹாங் ஆன சம்பவம் நடந்துள்ளது.

Amazon sale of an AC worth Rs 96,000 in India for Rs 5,900.

ஆடைகள் முதல் எலக்ட்ரானிக் ஐட்டம் வரை அனைத்துப் பொருட்களும் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்நிலையில் டோஷிபா 2021 மாடல் ஏசியின் மதிப்பான ரூ.96,000-க்கு பதில் ரூ.5,900-க்கு விற்பனை என அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

அதன்படி பார்த்தால் ரூ.96,000 ஏசி 94% தள்ளுபடியில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களோ டோஷிபா ஏசி 94% தள்ளுபடியா என வியந்து பலரும் முன்பதிவு செய்தனர்.

ரூ.5,900-க்கு ஏசியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பலரும் அமேசான் செய்த விலை மாற்றத்தால் அதிர்ச்சியும், வருத்ததிற்க்கும் உள்ளாகினர். ஆனால் இது குறித்து அமேசான் நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Contact Us