அய்யயோ, இத கேட்டு ஆடிகாரனே ஆடி போயிருப்பானே’… ‘கொதித்த நெட்டிசன்கள்’… உடனே கூகுள் தேடலில் பறந்த விஷயம்!

எங்களிடம் சொகுசு கார்கள் இல்லை Audi A6 என்ற கார் மட்டுமே உள்ளது என பப்ஜி மதன் மனைவி கிருத்திகா கூறியது சமூகவலைத்தளங்களில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

We don’t have luxury car, we only have an Audi A6 car, Madan's wife

We don’t have luxury car, we only have an Audi A6 car, Madan's wife

சொகுசு கார்கள் என் பெயரிலும் அவரின் பெயரிலும் இல்லை. அதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள். ஆடி ஏ6 கார் மட்டும்தான் மதன் வைத்திருக்கிறார். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். சொந்த வீட்டில் கூட குடியிருக்கவில்லை. தினமும் 20 மணி நேரம் யூடியூப் சேனலில் வேலைப்பார்த்து வந்தார். ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் ஓய்வு எடுப்பார்.

We don’t have luxury car, we only have an Audi A6 car, Madan's wife

பார்வையாளர்கள், சூப்பர் சார்ட்டிங் மூலம்தான் எங்களுக்கு வருமானம் கிடைத்தது” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையே எங்களிடம் சொகுசு கார் இல்லை. Audi A6 கார் ஒன்று மட்டுமே உள்ளது என்று கூறியது, அங்கிருந்த செய்தியாளர்கள் மட்டுமல்லாது நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கிருத்திகாவின் இந்த பேட்டி சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை பறக்க விட்டார்கள். அதோடு Audi A6 காரின் விலை எவ்வளவு என்று நெட்டிசன்கள் பலரும் கூகுளில் தேடி வருகின்றனர். இதனால் கூகுளில் கார் எனத் தேடினாலே Audi A6 என்ற காரின் விலைப்பட்டியல் வருகிறது. அதில் அந்த மாடல் காரின் விலை 65 லட்சத்திலிருந்து 75 லட்சம் வரை விலை மதிப்பைக் காண்பிக்கிறது.

We don’t have luxury car, we only have an Audi A6 car, Madan's wife

காரின் விலையை அறிந்த நெட்டிசன்கள், என்னது இந்த கார் சொகுசு கார் இல்லையா? என கடும் கொதிப்படைந்துள்ளனர். ஏற்கனவே பப்ஜி மதன் ஆபாசமாகப் பேசிவந்த நிலையில், அவரது மனைவி இதுபோன்ற குழப்பமாகப் பேசிவருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us