ஹெட்டி நாட்டு ஜனாதிபதி சுட்டுக் கொலை- அவர் மனைவி சாவுக்கு போராடி அமெரிக்கா வந்தார் !

நேற்றைய தினம் ஹெட்டி நாட்டில் உள்ள ஜனாதிபதி மாளிகையின், கடும் பாதுகாப்பை உடைத்து திடீரென ஒரு துப்பாக்கி கும்பல் ஒன்று உள்ளே நுளைந்துள்ளது. ஓசை படாமல் அமெரிக்க சீல் படையினர் செயல்படுவது போல செயல்பட்ட இந்த குழு. மின்னல் வேகத்தில் முன்னேறி ஜனாதிபதி தங்கும் அறைக்குச் சென்று அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றதோடு. அவரது மனைவி மீதும் பல தடவை சுட்டுள்ளார்கள். ஜனாதிபதி ஸ்தலத்திலேயே இறந்த நிலையில்….

அவரது மனைவி ஆபத்தான நிலையில் தனி விமானம் ஒன்றில், அமெரிக்க மயாமிக்கு வந்துள்ளார். அங்கே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்க உளவு நிறுவனம் இந்த தாக்குதல் எப்படி ? யாரால் நடத்தப்பட்டது என்று ஆராய ஆரம்பித்துள்ளது. துப்பாக்கிதாரிகள் மிகவும் பயிற்ச்சி பெற்ற நபர்கள் என்பது CCTV கமராவில் பதிவாகியுள்ள வீடியோவில் இருந்து தெரியவருகிறது. அதிர்வு இணைய வாசகர்களுக்காக CCTV கமரா பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

Contact Us