என்ன நடந்தாலும் அப்படியே பார்த்துக் கொண்டு இருக்கும் லண்டன் சனம் இதுகள் தான் !

பிரித்தானியாவில் பக்கத்து வீட்டில் 10 வருடமாக ஒரு குடும்பம் வசித்து வந்திருக்கும், ஆனால் அவர்களிடம் போய் உங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கேட்டால் தெரியாது என்பார்கள். ஏன் என்றால் அந்த அளவு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விடுவார்கள். இது நல்லதா இல்லை கெட்டதா என்று கூட தெரியவில்லை. இது இவ்வாறு இருக்க, மக்கள் அதிகம் பயணிக்கும் ரயில் ஒன்றில், முக கவசம் அணியாமல் இருந்ததோடு, அருகில் உள்ள ஆட்களை பார்த்து கேட்ட வார்த்தையால் திட்டிய கறுப்பின நபர் ஒருவரை, பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்ய முனைந்துள்ளார். அவர் தனி ஆளாக அன் நபரை கைது செய்ய முற்பட்டவேளை… அன் நபர் பொலிஸ் அதிகாரி முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்… ஆனால்…

அங்கே இருந்த எந்த ஒரு ஆண் மகனும் முன் வந்து குறித்த பொலிஸ் அதிகாரிக்கு உதவவில்லை. எனக்கு என்ன ? என்று இருந்துவிட்டார்கள். அங்கே ஒரு களோபரம் நடக்கிறது. ஆனால் சாவகாசமாக தமது ஐபோனை நோண்டிக் கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு வகை…. மனித இனம்…

Contact Us