பிரிட்டனின் அடுத்த நாசகாரி போர் கப்பல் தென் சீன கடல் நோக்கி விரைகிறது – ஏன் என்பது கேள்விக் குறிதான் !

பிரித்தானியாவின் HMS டிபெஃன்டர் என்னும் போர் கப்பல், ரஷ்யாவின் எல்லையில் நின்று ரஷ்யாவுக்கு பெரும் குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கும் அதேவேளை. பிரித்தானியாவின் மேலும் ஒரு நாசகாரி கப்பலான குவீன் எலிசபெத் சுயஸ் கால்வாய் ஊடாக தென் சீன கடல் எல்லை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. இது இறுதியாக HMS டிபென்ஃடருக்கு உதவியாக செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா ஏற்கனவே பிரித்தானியாவை மிரட்டி வருகிறது. HMS டிபென்ஃடரை அப்புறப்படுத்துமாறு அது கோரி வரும் நிலையில்… மேலும் ஒரு போர் கப்பலை … (வீடியோ இணைப்பு)

பிரித்தானியா ரஷ்ய கடல் எல்லை நோக்கி நகர்த்தி இருப்பது ஏன் என்று தெரியவில்லை. ரஷ்யாவின் மிரட்டலுக்கு நாம் அடி பணிய மாட்டோம் என்று உணர்த்தவே,  பிரிட்டன் இவ்வாறு ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் ஒரு ரஷ்ய நாசகாரிக் கப்பலை சுற்றி சுமார் 4 பிரித்தானிய போர் கப்பல்கள் ரஷ்ய கரும் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us