ஈராக்கில் இராணுவத்தளத்தின் மீது ராக்கெட் தாக்குதல்.. ஈரானை குற்றம் சாட்டும் அமெரிக்கா..!!

ஈராக்கின் ஜன் அல்-ஆசாத் என்ற விமானதளத்தில் தான் அமெரிக்கா மற்றும் மற்ற சர்வதேச படைகளும் இருக்கிறது. இந்நிலையில் இங்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர்  கூறியிருக்கிறார்.

மேலும் இந்த தாக்குதலில் 3 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் கூட்டுப்படையின் செய்தித்தொடர்பாளரான Wayne Marotto, என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, மதிய நேரத்தில் ஜன் அல்-ஆசாத் விமானதளத்தை சுமார் 14 ராக்கெட்டுகள் தாக்கியது.

விமானத்தளத்தின் அடிப்பகுதியிலும், சுற்றுப்புறங்களிலும் ராக்கெட்டுகள் தாக்கியது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அரசு, ஈராக்கில் இருக்கும் தங்கள் படைகளை நோக்கி, ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் குழுக்கள் தான் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.

Contact Us